முதலில் பினாயில் பிறகு தூக்கு! கணவன், குழந்தையை தவிக்கவிட்டு பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! பகீர் காரணம்!

சக ஊழியர்கள் தன்னிடம் பேசாமல் புறக்கணிப்பதாக கூறி பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.


சென்னை புளியந்தோப்பில் கணவர் கிருஷ்ணா மற்றும் 7 வயது மகள் யுவஸ்ரீயுடன் வசித்து வந்தார் தனியார் பள்ளி ஆசிரியை காயத்ரி. இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள், ஊழியர்கள் தன்னை புறக்கணிப்பதாகவும், யாரும் சரியாக பேசுவது இல்லை எனவும் காயத்ரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை கிண்டல் செய்வதாகவும் கணவர் மற்றும் தாயிடம் தெரிவித்து வந்துள்ளார் காயத்ரி. இந்நிலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய காயத்ரி, திடீரென கழிவறைக்கு சென்று அங்கு சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து அவரை காப்பாற்றி சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும் ஏதோ ஒரு பிரச்சனை அவரின் மனதில் ஓடிக் கொண்டே இருக்க அன்று இரவே தூக்குப் போட்டுக் கொண்டார் காயத்ரி. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். ஆனால் காயத்ரி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உண்மையிலேயே யாரும் பேசவில்லை என்பதற்காக காயத்ரி விபரீத முடிவு எடுத்தாரா அல்லது அவருக்கு யாராவது வேறு ஏதேனும் தொல்லை கொடுத்ததால் வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் போலீஸ் விசாரணை.

எது எப்படியோ காயத்ரியின் விபரீத முடிவு கணவர் மனைவியை இழந்துள்ளார். குழந்தை தாயை இழந்துள்ளது.