ஆசிரியை ரம்யா கொலை வழக்கு! கொலையாளிக் காதலன் ராஜசேகர் சடலம் முந்திரிக்காட்டில் மீட்பு !

ஆசிரியை ரம்யாவை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து கொடூரமாக கொலை செய்த அவரது காதலன் ராஜசேகர் உடல் முந்திரகாட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


 குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள காயத்திரிமெட்ரிகுலேசன் எனும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  இவரை ராஜேசேகர் என்ற நபர்காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று ரம்யா வேலை செய்யும் காயத்ரி மெட்ரிகுலேசன் பள்ளிக்குச் சென்ற ராஜசேகர் வகுப்பறையில்இருந்த ரம்யாவுடன் தகராறு செய்துளளான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவன்வலியுறுத்தியுள்ளான்.

ஆனால் ரம்யா அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் தான் கையோடுகொண்டுவந்திருந்த கத்தியால் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை ரம்யா கழுத்தை அறுத்துள்ளான். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இதனை பார்த்த மாணவர்களும் சக ஆசிரியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். தப்பி ஓடிய ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ரம்யாவும் – ராஜசேகரும் காதலித்து வந்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது பழக்கமான ரம்யா – ராஜசேகர் முதலில் நண்பர்களாக பழகியுள்ளனர். பின்னர் காதலாக மாறியுள்ளது. காதல் நீடித்த நிலையில் ஒரு கட்டத்தில் ரம்யாவை திருமணம் செய்து கொள்ள ராஜசேகர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக குறிஞ்சிப்பாடியில் உள்ள ரம்யாவின் பெற்றோரை சந்தித்து ராஜசேகர் பெண் கேட்டுள்ளார். ஆனால் ராஜசேகரின் ஜாதியை காரணம் காட்டி மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் ரம்யாவுக்கும் ராஜசேகருடன் பழக தடை விதித்தனர். இதனை ஏற்ற ரம்யா ராஜசேகருடனான பழக்கத்தை துண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே ரம்யாவை ராஜசேகர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தும் ராஜசேகர் மூலமாக தெரியவந்துள்ளதாகவும் விரைவில் அவனை கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ராஜசேகரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர. ஆனால் ராஜசேகர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தான். இந்த நிலையில் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டான். 

ரம்யாவை கொலை செய்துவிட்டு தப்பிய ராஜசேகர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையான் குளத்தில் உள்ள முந்திரிகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜசேகர் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

அவன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.