கூட வேலை பார்க்குறவர்னு நம்பி பழகுனேன்..! இப்போ இப்படி பண்ணிட்டு போய்ட்டாரு! பேராசிரியரால் பேராசிரியைக்கு ஏற்பட்ட கொடுமை!

தஞ்சை தனியார் கல்லூரி பேராசிரியரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சக பேராசிரியர் கைது!


தஞ்சை அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பெண் பேராசிரியையை, அவருடன் வேலைப்பார்க்கும் சக பேராசிரியர் காதிலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பேராசிரியர் தற்போது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தின் அருகே உள்ள, கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர் வல்லம் அடைக்கலமாதா கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் உடன் பணிபுரியும் சக பெண் பேராசிரியை ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும், இவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரோடு தனிமையில் இருவரும் சந்தித்து உள்ளனர்.

இப்படி இருவரும் பழகி வந்த நிலையில், திடீரே அவர் பேராசிரியரை ஓரம் கட்ட நினைத்துள்ளார். பின்னர் பென் பேராசிரியர் உடன் பழகுவதை படிபடியாக நிறுத்தியுள்ளார் அஸ்வின்ராஜ். இதனை அறிந்த பெண் பேராசிரியர் காவல்நிலையத்திற்கு சென்று என்னுடன் தனிமையை கழித்துவிட்டு, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினர், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அஸ்வின்ராஜை கைது செய்தனர் காவல்துறையினர். இந்த தகவலை அடுத்து பெண் பேராசிரியையுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்வின்ராஜின் தந்தை செல்வராஜையும் காவல்துறையை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.