சசிகலா டீச்சர்! உருகும் மாணவர்கள்! மருகும் பெற்றோர்! ஏன் தெரியுமா?

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பிள்ளை பேரூராட்சியின் எம்ஜிஆர் நகரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் டீச்சராக வேலை பார்க்கிறார்,சசிகலா


அப்பகுதியில் வசிக்கும்  மிகவும் பிற்படுத்தபட்ட குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த படிப்பு  வாசமே இல்லாதவர்கள் எனினும் சசிகலா டீச்சர் வீடுதேடி சென்று அவர்களுக்கு படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து விளக்கி சொன்னதின் விளைவாக தினந்தோறும் பள்ளிக்கு பிள்ளைகள் வருவது பெரிய பிரச்சனையாகவே இருந்தது

குடும்ப சூழல், வறுமை என காரணங்களால் படிக்க இயாலத பிள்ளைகளின் நிலையை உணர்ந்த டீச்சர் தன் சம்பளத்தில் பெரும்பாலான தொகையை மாணவர்களின் பாடப்புத்தகங்கள், சாப்பாடு, படிப்புக்கான உபகரணங்கள் என கணக்கு பார்க்காமல் செய்துள்ளர்ர்

காலபோக்கில்  193 பேர் படித்து வருகிறார்கள். மாணவர்களின் உற்சாகபடுத்தி படிப்பின்பாற் ஈர்க்க தனது சொந்த பண செலவில், 52 ஆயிரம் மதிப்பான ஒரு ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துள்ளார். தீபாவளி  போன்ற எல்லா பண்டிகைக்கும் பள்ளியில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் சொந்த செலவில் துணி எடுத்து கொடுத்து அவர்களுடன் குடும்பமாக  கொண்டாடி வரும் அந்த நல்ல உள்ளத்திற்க்குதான்  நல்லாசிரியர் விருது சசிகலாவிற்கு தேடி வந்தது எனலாம்

இது குறித்து பேசிய சசிகலா டீச்சர், இதில் என் பங்கு மட்டும் சொல்லிவிட முடியாது. என் கணவர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்  சக ஆசிரிய பெருமக்களின் பங்கும் இதில் ஏராளம். இவர்களின் உதவியால்தான்  எல்லாம் சாத்தியமானது.மேலும் தன்னிடம்  படித்த பிள்ளைகளில் தற்போது 30 பேர் காலேஜ் படிக்கிறார்கள். 3 பேர் என்ஜினியரிங் படித்து கொண்டிருக்கிறார்கள் என பூரிப்புடன் பகிர்ந்துன்கொண்டவர், 8-ம் வகுப்பு வரையே உள்ள இந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவது தான் லட்சியமாக கொண்டுள்ளார்..

ஒருபக்கம் ஊதியம் பத்தவில்லை என போராடும் ஆசிரியர் மத்தியில் இம்மாதிரி ஆன நல்லாசிரியர்களும் சத்தமில்லாமல் இயங்கிவருகிறார்கள்...