சாப்பிடாம வந்தவங்கல்லாம் கைத் தூக்குங்க! நெகிழ வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியைகள்!

தூத்துக்குடியில் காலை உணவு சாப்பிடாமல் வருபவர்களை கைத்தூக்க சொல்லி கைனிறைய ஸ்னாக்ஸ் கொடுக்கும் பள்ளி ஆசிரியர்கள், குஷியில் மாணவர்கள்.


தூத்துக்குடியில் டி சவேரியாபுரத்தில், இயங்கி வரும் அரசு உதவிப்பெறும் ஆர்.சி மெட்ரிக் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மேற்ப்பார்வையிட வந்த பள்ளியில் நிர்வாகி, மாணவர்கள் மத்தியில் காலையில் சாப்பிடாமல் வந்தவங்க கையை உயர்த்த சொல்ல, உடனடியாக 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கைத் தூக்கினர்,

அதிர்ந்து போன நிர்வாகி ஏன் எனக் கேள்வி எழுப்ப, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், குளித்து ,யூனிபார்ம் மாட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு வந்துடுவோம்னு பிள்ளைகள் சொல்ல, உறைந்து போன ஆசிரியர்கள் உடனடியாக கலந்து பேசி, அடுத்த சில நாட்களூக்குள்ளாக ஒரு நாளைக்கு 2கிலோ வீதம் பாசிப்பயிறு வாங்கி சுத்தம் செய்து முளைக்கட்டி வைக்கின்றனர்.

பிள்ளைகள் அடுத்த நாள் காலையில் பள்ளிக்கு வரும் போது முதல் வகுப்பில், சாப்பிடாதவர்களை கைத்தூக்க சொல்லி அவர்கள் கை நிறைய ஸ்நாகஸ் தருகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கு தனிக்குஷி தான், மேலும் இதற்க்காக மாதம் 4 ஆயிரம் வரை செலவு ஆவதாக கூறிய தலைமை ஆசிரியர், பிள்ளைகள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் தான் முக்கியம் என பூரிக்க வைக்கிறார்கள்.