ஒரே ஒரு ஓசி டீ தர மறுப்பு! டீ கடைக்காரரை சம்பவம் செய்த கொடூரம்! மதுரை திகுதிகு!

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் டீக்கடை அருகே இளைஞர்கள் பலர் கஞ்சா புகைத்து கொண்டும் மற்றும் கஞ்சா விற்றுக் கொண்டும் அட்டகாசம் செய்து வந்துள்ளனர்.


அந்தபுரம் காலனி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் ஒரு சிறிய குட்டிச் சுவர் ஒன்று உள்ளது. அதில் இளைஞர்கள் பலர் அந்த சுவரில் உட்கார்ந்து கஞ்சா புகைப்பது மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

காலை மற்றும் மாலை வேளைகளில் மதுபானம் அருந்திவிட்டு கடையில் வடை மற்றும் டீ சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வழியாக வரும் பள்ளி குழந்தைகளை கிண்டலடிப்பது மற்றும் பெரியோர்களிடம் சண்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் அளித்துள்ளார்.

 இந்நிலையில் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் வந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பலை எச்சரித்துள்ளனர். அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் டீக்கடைக்காரர் எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில் மாரிமுத்து வழக்கம்போல் சனிக்கிழமை காலை கடையை திறந்துள்ளார். அதை கவனித்துக் கொண்டிருந்த அந்த மர்ம கும்பல் மாரிமுத்து கடை திறந்த உடனேயே வந்து  சரமாரியாக தாக்கியுள்ளனர். கட்டை மற்றும் பாட்டில்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவமானது அருகில் உள்ள கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 பலத்த காயமடைந்த மாரிமுத்து கடையை விட்டு வெளியே ரோட்டில் ஓடியுள்ளார்.சிறிது தூரம் சென்ற பிறகு மயங்கி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து உடனே மாரிமுத்துவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரிமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அதே அப்பகுதியை சேர்ந்த வீரக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.மற்றும் தப்பியோடிய 5 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்