வேலை நேரத்தில் எங்கடா போன? 73 வயது டாக்டரை அடித்தே கொலை செய்த டீ எஸ்டேட் தொழிலாளர்கள்! பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

ஜோர்ஹத்: 73 வயதான டாக்டரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலம், ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள டியோக் தேயிலை தோட்டத்தில்தான் இந்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது. இங்கு பணிபுரியும் சுக்ரா மஜ்ஹி (33 வயது), திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், தேயிலை தோட்டத்திலேயே செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் வெளியில் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், ஃபார்மசிஸ்ட் பணியில் இருந்தவரும் விடுமுறையில் இருந்திருக்கிறார். நர்ஸ் மட்டும்தான் மருத்துவமனையில் இருந்தாராம். அவர் சுக்ராவை அனுமதித்து, சலைன் ஏற்றியுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.  

இதற்கிடையே, பிற்பகல் 3.30 மணியளவில் பொறுமையாக டாக்டர் தேவன் தத்தா வந்துள்ளார். சுக்ரா உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள், டாக்டரை சுற்றி வளைத்து சராமரியாக அடித்து உதைத்தனர். இதில், அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட டாக்டர் தேவன் தத்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு, 73 வயதான நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இப்படி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.