ஓராண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் ரொக்கப்பணம் வெளியே எடுத்தால், வரி விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வங்கியில் இருந்து இனி பணம் எடுத்தால் வரி? நிர்மலா சீதாராமனின் விபரீத திட்டம்!

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரித்து, அதேசமயம், ரொக்கமாக நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல வழிகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கியுள்ளனர். இதன்படி, வங்கிக்கணக்கில் ரூ.50,000 தொகைக்கு மேல் டெபாசிட் செய்தால் பான் எண் தரவேண்டும என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆதார் எண் அடிப்படையில் ஓடிபி அனுப்பி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முறைப்படுத்தவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஓராண்டில், அதிகபட்சமாக, ரூ.10 லட்சத்திற்கும் மேல் ரொக்கமாக, ஏடிஎம் அல்லது வங்கிகளில் இருந்து வெளியே எடுத்தால் வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதுபற்றிய விரிவான விவரங்கள், நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது வெளியாகும் என, மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. சமீபத்தில், நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் வழிமுறைகளில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.