மூட்டை மூட்டையாக பணத்துடன் சென்னையை சுற்றி வரும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கார்கள்!

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையில், நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டில் மூட்டை மூட்டையாக தங்கம், வைரம் மற்றும் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தின் பிரபல ஜவுளிக்கடையாக சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளைகளை பரப்பி, ஜவுளி விற்பனை மட்டுமின்றி, அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் விற்பனையில், பெரும் வர்த்தக சாம்ராஜ்யமாக சரவணா ஸ்டோர்ஸ் வளர்ச்சியடைந்துள்ளது

 

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய், லோட்டஸ் குரூப், ஜி ஸ்கொயர் உள்ளிட்டவற்றுக்குச் சொந்தமாக, சென்னை, கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

 

இதில், அள்ள அள்ள குறையாத அளவுக்கு, தங்கம், வைரம் மற்றும் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுளளதுமொத்தம் 76 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் பொன்துரைக்குச் சொந்தமான 72 இடங்களும் அடங்கும்.

 

இதன்படி, மொத்தம் கணக்கில் வராத ரூ.433 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 25 கோடி ரூபாய் ரொக்கமும், 12 கிலோ தங்கமும், 626 கேரட் வைரமும் அடக்கம்

 

குறிப்பாக, யோகரத்தினம் அவரது தொழில்கூட்டாளி பாலா உள்ளிட்டோரிடம், கடந்த பல மாதங்களாக, கோடிக்கணக்கான ரூபாய் பணப்புழக்கம் இருந்து வந்துள்ளது. அவர்கள், சமீபத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான சொத்து ஒன்றை, ரொக்க பணத்திற்கு வாங்கியுள்ளனர்.

 

இதுபோலவே, பலவித பரிவர்த்தனைகளை கையிருப்பு பணத்திலேயே மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இதுபற்றி வருமான வரித்துறைக்கு எவ்வித தகவலும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

 

இதையடுத்தே, அவர்களை நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று, அவர்களுக்குச் சொந்தமான இடங்களில்அதிரடியாக ரெய்டு நடத்தி, மேற்கண்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்

 

இது மட்டுமின்றி, முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பலவற்றையும், இந்த ரெய்டில் கைப்பற்றியுள்ளதாக, வருமான வரித்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

 

இதனிடையே வருமான வரித்துறையினர் சோதனையின் போது முதலில் பெரிய அளவில் ரொக்கம் கிடைக்கவில்லை. இதே போல் கணிணித்தகவல்களும் உடனடியாக அழிக்கப்பட்டன. இதனால் அதிகாரிகள் தங்கள் ஸ்டைலில் விசாரித்துள்ளனர்.

 

அப்போது தான் கையில் இருந்த ரொக்கத்தை தனது பணியாளர்களிடம் மூட்டை கட்டி கொடுத்து காரை எங்கும் நிறுத்தாமல் சென்னைக்குள்ளேயே ஓட்டிக் கொண்டிருக்குமாறு பொன்னுத்துரை கூறியுள்ளார். இதனை அறிந்து ஒனறு இரண்டு கார்களை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

 

அந்த கார்களில் இருந்த மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது. ஆனால் மேலும் சில கார்கள் தற்போது வரை பணத்துடன் சென்னையை சுற்றி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.