சிவக்குமாருக்கு விரிக்கப்பட்ட வலை! சிக்கிய சித்தார்த்தா! காஃபி டே சாம்ராஜ்யம் சரிந்த கதை!

காஃபிடே உரிமையாளர் சித்தார்தா மரணத்திற்கு காரணம் கடன் தொல்லை அல்ல,கர்நாடகத்தைக் கைப்பற்ற பிஜேபி விரித்த வலைதான் அவரைக் கொன்றுவிட்டது


காஃபிடே உரிமையாளர் சித்தார்தா மரணத்திற்கு காரணம் கடன் தொல்லை அல்ல,கர்நாடகத்தைக் கைப்பற்ற பிஜேபி விரித்த வலைதான் அவரைக் கொன்றுவிட்டது என்று இப்போது தகவல்கள் கசியத்துவங்கி இருக்கின்றன. அதன் படி சித்தார்த்தாவின் சாவை நோக்கிய முதல் அடியை 2017லேயே எடுத்து வைத்துவிட்டார்.குஜராத்திலிருந்து பாராளுமன்ற மேலவைக்கு போட்டியிட்டார் அகமது பட்டேல்.அவரைத் தோற்கடிக்க முடிவு செய்த அமித்ஷா எம்.எல்.ஏக்களை விலை பேசத் துவங்கினார்.

அப்போதுதான் கர்நாடக் அமைச்சரும் தொழிலதிபருமான டி.கே சிவகுமார் களத்தில் இறங்கி 44 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து பாதுகாது அகமது படேலின் வெற்றியை உறுதி செய்தார்.இதனால் டி.கே சிவகுமார்,அவரது அண்ணனும் எம்.பியுமான டி.கே சுரேஷ் இருவருக்கும் மத்திய அரசு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தது. தற்போது பிஜேபியில் இருக்கும் எஸ்.எம் கிருஷ்ணா  காங்கிரசில் இருந்த காலத்திலிருந்தே சிவகுமார் அவரது ஆதரவாளர்.இருவரும் கெளடா என்கிற ஒரே இனத்தவர் என்பதால் அவர்களிடையே நல்ல நெருக்கம் இருந்தது.

எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் என்கிற முறையில் சிவகுமாருக்கு அறிமுகமான சித்தார்த்தா தொழிலதிபர் என்கிற முறையில் சிவகுமாருக்கு நெருக்கமானார்.இந்த நிலையில் சிவகுமார் வீட்டில் மத்திய அரசின் வருமான வரித்துறை மூன்று நாட்களாக ரைடு நடத்தியது.அப்போது கிடைத்த ஆவணங்களில் சிவகுமாருக்கும் காஃபிடே சித்தார்த்தாவுக்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்கள் கிடைத்தன.இவற்றோடு சிவகுமாரின் நிதி ஆலோசகர் சந்திரசேகர கவுபுரியிடம் இருந்து கிடைத்த ஆவணங்களிலும் சித்தார்த்தா குறித்த மேலும் வலுவான தகவல்கள் கிடைத்தன.

அதை வைத்து சிவகுமாருக்கு எதிராக சித்தார்த்தாவிடம் வாக்குமூலம் வாங்க முயற்சி நடந்ததாம்,அதற்கு சித்தார்த்தா பணியாததால் அவரது நிறுவனங்களிலும் அதிரடி ரைடுகள் நடந்தன.அந்த ரைடுகளின் போது விதிகளை மீறி துவக்கத்திலேயே சிவகுமாரின் சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை.அதனால்த்தான் கடன்களை அடைக்க சொத்துக்களை விற்க முடியாத சோகத்தில் சித்தார்த்தா இப்படி ஒரு முடிவைத் தேடிக்கொண்டார் என்கிறது பெங்களூர் வட்டாரம்.