பிரபல நடிகர் மீது செக்ஸ் புகார்! மோடியிடம் நியாயம் கேட்கும் பிரபல நடிகர்!

நானா பட்டேக்கருக்கு எதிரான பாலியல் வழக்கில் போலீஸ் கைவிரித்து விட்ட தால் தனுஸ்ரீ தத்தா அதிர்ச்சி அடைந்துள்ளார்.


ஹாரன் ஓகே ப்ளீஸ் என்ற திரைப்படத்தில் நடித்தபோது பிரபல நடிகர் நானா படேகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்தார். விசாரித்த மும்பை  ஒஷிவாரா போலீசார் அந்தப் புகார் பொய்யெனக் கூறி வழக்கை முடித்து வைத்து உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தனுஸ்ரீ தத்தா போலீசும் குற்றவாளியும் தோளோடு தோள் சேர்ந்து கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தங்களிடமிருந்து ஆதாரங்களை வாங்கி கொண்ட போலீசார் தங்களை நம்பவைத்து முதுகில் குத்தி விட்டதாகவும் தனுஸ்ரீ தத்தா வேதனை தெரிவித்துள்ளார். நானா படேகர் மீது புகார் அளித்த போது அவரது ஆதரவாளர்கள் தனது காரை தாக்கியது குறித்த வீடியோ காட்சிகளை போலீசாரிடம் ஆதாரமாக அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் சிலர் தனக்காக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தனுஸ்ரீ தத்தா இதை விட வேறு என்ன ஆதாரங்கள் தேவை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அந்த புகார் தவறானது என்று பதிவு செய்ய போலீசாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று அவர் காட்டமாக வினா எழுப்பியுள்ளார்.

போலீசாரின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மாஜிஸ்திரேட் எவ்வளவு பணம் பெற்றுள்ளார் என்றும் தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார் ஊழலற்ற இந்தியா என்ன ஆயிற்று என்றும் இந்தியாவின் மகள், ஒருவரால் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் வினவியுள்ளார். நானா படேகரின் அறக்கட்டளை மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுவதாகவும் தனுஸ்ரீ தத்தா குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.