நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி! அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்! பதற வைத்த விபத்தின் CCTV!

பிரேசில் நாட்டில் நடுரோட்டில் டேங்கர் லாரி வெடித்து சிதறியதால், அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் வீடியோ பதிவு பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.


பிரேசில் நாட்டின் கரகுவாட்வா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் வளைவில் பெட்ரோல் இந்திய டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அச்சமயம் வளைவில் திரும்புகையில், திடீரென லாரி கவிழ்ந்தது.  

கவிழந்தபோது லாரி டேங்கரின் மூடி திறந்ததால், உள்ளே இருந்த பெட்ரோல் அனைத்தும் நடுரோட்டில் கசிந்தது. அதிர்ஷ்டவசமாக டேங்கர் லாரி பின்னால் வந்த கார் சுதாரித்துக் கொண்டதால் லேசான விபத்துடன் முடிந்தது.  

அதன்பின் பின்னர் வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்பட்டது. திடீரென ரோட்டில் கசிந்த பெட்ரோல் தீ பற்றியதால், நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் இருந்த அனைவரும் தப்பி ஓடினர். டேங்கர் லாரி மீது மோதிய கார் ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவர் இருவரும் லேசான காயங்களுடன் தப்பி இருக்கின்றனர். 

சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் வந்து, அப்பகுதி முழுவதும் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் சிசிடிவி பதிவு தற்போது இணையதளங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.