சேர்மன் பதவி திமுகவுக்கு..! துணை சேர்மன் பதவி அமமுகவுக்கு..! ஸ்டாலின் - தினகரன் திடீர் கூட்டணி! தமிழக அரசியலில் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தை கைப்பற்ற திமுக மற்றும் அமமுக கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


திருவோணம் ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் தி.மு.க 7 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், அ.ம.மு.க 2 இடங்களையும் கைப்பற்றியது. அம.மு.க-வினர் ஆதரவு தரும் கட்சிதான் ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்கும். இதனால் தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் கூட்டணி அமைத்து அப்பதவியை கைப்பற்றும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. .

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டம் முழுவதும் தி.மு.க பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளது. எனவே ஒன்றிய, மாவட்ட சேர்மன் பதவிகளையும் திமுகவே பிடிக்கும். பேராவூரணி, திருவோணம், மதுக்கூர் ஒன்றியங்களில் மட்டும் அ.தி.மு.க கூடுதலான இடங்களைப் பிடித்துள்ளது.

அதே சமயம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் என்ன ஆயிற்று என கேட்டாராம். சில ஒன்றியங்களின் சேர்மன் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என வைத்தியலிங்கம் தெரிவிக்க எவ்வளவு செலவானாலும் பிடித்துவிடுங்கள் என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது தன் பக்கம் இழுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் வைத்தி. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினும் தினகரனும் சந்தித்துப் பேசிக்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.