தமிழ்த்தாயே ரத்தக்கண்ணீர் வடிக்காதே! வளர்மதியும் வர்றாங்க!

உலகத் தமிழ் ஆய்வு மன்றம் தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.


நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், ஜூலை 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. 

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம் தமிழ் வளர்ச்சி. ஆனால், இந்த ஆண்டு இந்த மாநாட்டில் கலந்துகொள்பவர்களை நினைத்தாலே கண்கள் கலங்குகிறது என்று தி.மு.க. ஐ.டி. விங்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஆம், யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள், அவர்கள் சிறப்புகள் என்னவென்று பாருங்கள்.

* பா. வளர்மதி 

கேள்வி :உயிர்மெய் எழுத்துகள் எத்தனை...? 

பதில் :அடிங்கோ.....தா யாரபாத்து என்ன கேள்வி கேட்ட..?

* சி. பொன்னையன் அதிமுக அமைப்பு செயலாளர் 

கேள்வி :மெய் எழுத்துக்கள் எத்தனை...? 

பதில் : சட்டை அவுத்தாதான் தெரியும் மெய்

* நிர்மலா பெரியசாமி 

அதிமுக செய்தி தொடர்பாளர் 

கேள்வி : வணக்கம் பிழையில்லாமல் சொல்லவும் 

பதில் : ஏய் வணக்கத்த வணணணக்கககம் னு கண்டுபுடுச்சதே நான் தா..

* கோ.சமரசம்

அதிமுக செய்தி தொடர்பாளர் 

கேள்வி : தமிழ் அன்னைக்கு மதுரையில் அம்மா அமைப்பதாக சொன்ன சிலை எப்போது அமைக்கப்படும் 

பதில் : நீ கேட்டா நாங்க சொல்லிடுனுமா...? அது எங்க அம்மாவுக்கே தெரியாது...

இப்படி இன்னும் பல தமிழறிஞர்கள் தமிழக அரசு பணத்தில் மாநாட்டில் பங்கேற்று தமிழ் வளர்ப்பார்கள். நல்லகாலம் இந்தக் கொடுமை எல்லாம் பார்ப்பதற்கு முன்னால் சிவத்தம்பியும், மா.நன்னனும் இறந்து விட்டார்கள்.