பதவி கிடைச்சதும் எடப்பாடிக்கு எச்சரிக்கை செய்யும் தங்கதமிழ்ச்செல்வன்!

தினகரன் கட்சியில் இருந்த வரையிலும் தினம் ஒரு பேட்டி என்று ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தார் தங்கத்தமிழ்ச்செல்வன்.


கட்சி மாறிய பிறகு கப்சிப் என்று சைலன்ட் மோடுக்குப் போனார். இந்த நிலையில், ‘இதுக்குத்தான் என்னை கட்சி மாறச் சொன்னீங்களா?’ என்று அவரை கட்சி மாறுவதற்குச் சொன்ன கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பி டென்ஷன் ஆனாராம் தங்கம்.

உடனே அவர் தலைமைக்குத் தகவல் தரவே, உடனே அவருக்கும் கலைச்செல்வனுக்கும் பதவி கொடுத்துவிட்டார்கள். அதன்படி தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வனும், தி.மு.க.வின் இலக்கிய அணிச் செயலாளராக கலைராஜனும் நியமனம் செய்யப்பட்டார்கள்.

ஏற்கெனவே ஆ.ராசா, திருச்சி ராசா ஆகியோர் கொள்கைபரப்புச் செயலாளர்களாக இருக்கும்போது, டம்மியாக இப்படி ஒரு பதவி கொடுத்திருப்பதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன், ‘முதல்வர் வெளிநாடு போனது எதற்காக என்று தெளிவாகவே நாங்கள் எடுத்துச்சொல்வோம், அதுவரை காத்திருங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்துப் போனார்.

ஒரு தமிழன் கோட் போட்டுட்டு வெளிநாட்டுல போய் கொஞ்சம் ஜாலியா இருந்தா இவங்களுக்குப் பொறுக்காதே..