டிடிவி தினகரன் போர் தளபதியாக வலம்வந்த தங்க தமிழ்செல்வன் சமீபத்தில் அமமுக வில் இருந்து திமுகவில் இணைந்தார் இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது எனலாம்.
சோறு போட்ட தினகரனை இப்போதும் மறக்காத தங்கம்! ட்விட்டரில் அரங்கேறிய தரமான சம்பவம்!

இதற்கிடையில் தங்க தங்க தமிழ்செல்வன் அவரது டிவிட்டர் பக்கத்தில் முன்னதாக டிடிவி சார்பாக வரும் அறிக்கைகளை பகிர்வது வழக்கம் அது போல, திமுகவில் இணைந்த பின்பும், அமமுக சார்பில் அழகு முத்துகோன் தின சிறப்பு குறித்து வெளியான அறிக்கையை,
அசந்தாற்போல தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது உள்ளார்,சிறிது நேரம் கழித்து சுதாரித்து கொண்ட பின்னர் மீண்டும் அந்த போஸ்ட்டை நீக்கியுள்ளார்.
இது குறித்து நெட்டிசன்கள் எச் ராஜா டிரெண்ட் போல அட்மின் போட்டதாக தான் கூறுவார் என நக்கல் அடித்து வருகின்றனர். என்னதான் திமுகவில் இணைந்தால் கூட பழைய எஜமான் பாசம் உண்டல்லவா.