அதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.! அதிர்ச்சியில் தமிழக மக்கள்

ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, தமிழகத்தை கைப்பற்றிவிட்டது போன்று தி.மு.க. பிரமுகர்கள் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டனர். பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் தங்கள் வீரத்தைக் காட்டிய உடன்பிறப்புகள் இப்போது அதிகாரிகளை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.


மத்திய மாவட்டம் ஒன்றைச் சேர்ந்த திமுக புள்ளி அவர். சமீபத்தில் ஒரு பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினார். ‘’ முடியுமா, முடியாதா?’’ என எடுத்த எடுப்பிலேயே எகிற, ஆட்சியர் பிரச்சனை தொடர்பான சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கிறார். அதை கொஞ்சமும் காதில் வாங்காத திமுக புள்ளி, ’’ரூல்ஸையெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்க. இந்த விஷயத்தை செஞ்சி தரலைண்ணா அடுத்த எங்க ஆட்சியில் முதல் டிரான்ஸ்பர் உங்களுக்குத்தான்’’ என பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.

திமுகவினரின் இந்த அராஜகம் குறித்து கட்சி சாராத நடுநிலையாளர்கள் சிலரிடம் கேட்டபோது. ‘’திமுகவுக்கு எதிரி வேறு யாருமல்ல. அந்தக் கட்சியினரேதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து திமுக ஆட்சிக்கு வருமா அப்படிங்கறதே சந்தேகமாக இருக்குது. ஆனால் அந்தக் கட்சிக்காரர்கள் பலரும் இப்பவே ஆட்சியை பிடித்துவிட்ட மாதிரி ஆட்டம் போடறாங்க. இதையெல்லாம் பார்க்கிறப்போ கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் நடந்த வரலாறு காணாத நில அபகரிப்பு உள்ளிட்ட அதிகார அத்துமீறல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. 

தப்பித்தவறி இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இந்த மாதிரி நடக்கும் என்பதற்கான அறிகுறிகளாகத்தான் இப்போதைய சம்பவங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் ஸ்டாலின் கட்டுப்படுத்துவாரா அப்படிங்கறது கேள்விக்குறிதான். ஜனங்க எல்லாவற்றையும் கவனிச்சிகிட்டுதான் இருக்கிறாங்க. மொத்தத்தில் திமுகவினர் தங்கள் தலையிலேயே தாங்களே மண்ணை அள்ளிப் போடற மாதிரிதான் தெரியுது’’ என்றார்கள்.

இப்போதே இப்படியென்றால் ஆட்சிக்கு வந்துவிட்டால்…? அராஜகம் எல்லை மீறிவிடும் என்பது தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன..?