தாய் தந்தை இன்றி தவிக்கும் 30 குழந்தைகள்! தத்தெடுக்க யாரும் முன்வராத கொடுமை!

மாற்றுத் திறனுடன் பிறக்கும் குழந்தைகளை தத்தெடுக்க தமிழகத்தில் எவரும் முன்வருவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில் மொத்தம் 20 குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 38 குழந்தைகள் மாற்றுத் திறன் உடையவர்கள். பொதுவாக இதர குழந்தைகளை தத்து எடுப்பதற்கு ஆர்வம் காட்டும் தமிழக தம்பதிகள் மாற்றுத் திறன் குழந்தைகளை தத்து எடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மாற்றுத்திறன் பிள்ளைகளை தத்தெடுத்து சென்றவர்களும் திரும்பி வந்து கொடுத்துவிட்டதாக மைய ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். குறைகளுடன் இருக்கும் குழந்தைகளை சுமையாகவே தமிழக தம்பதிகள் நினைப்பதாகவும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 38 குழந்தைகள் மாற்றுத் திறன் குறைபாடுகளுடன் தடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களில் 30 குழந்தைகள் தத்து கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இது போன்ற குறைபாடுகளும் பிறந்த 80 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர் வைத்து எடுத்துச் சென்றவர்கள் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிகள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறைபாடுகளுடன் இருக்கும் குழந்தைகளை அதுபோன்று அவர்கள் பாவிப்பதில்லை என்று தத்து மையங்கள் பெருமிதம் தெரிவித்துள்ளன.