மனைவிக்காக அம்மன் பட்டுப் புடவைகள் இரண்டை சுருட்டிய அமைச்சர்! கோவில் விழாவில் கேமராவில் சிக்கிய பரிதாபம்!

நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக அமைச்சர்கள் சமபந்தி போஜனம்,இலவச வேட்டி சேலை வழங்குவது என ரொம்ப பிசியாக இருந்தார்கள்.


பெரும்பாலான கோவில்களில் அரசு செலவில் பக்தர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் மதிய உணவுக்கு நேற்று மட்டும் ' சமபந்தி போஜனம்' என்று புது டைட்டில் வைத்துவிட்டார்கள்.திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருமாரி அம்மனுக்கு பக்தர்களால்  சாத்தப்பட்ட புடவைகளை 'இலவச' புடவைகளாக வழங்கினார்.

தெய்வீகத்தையும் ,தேசீயத்தையும் கோபி 4 பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இருக்கிறார்கள்.வசந இன்னும் எத்தனை புதுக் காட்சிகள் வந்தாலுமொலொ அதிமுகதான் தமிழகத்தை ஆழும் என்று மக்களை 'எண்டர்டெயின்' செய்துவிட்டு போய்விட்டார்.ஆனால்  திண்டுக்கல் சீனிவசன் விழாவில் நடந்ததுதான் ஹைலைட்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்த விழாவிற்கு தம்பதி சகிர்தராக எழுந்தருளினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். வேதவல்லித் தாயாருக்கும் ஆண்டாளுக்கும் பக்த்தர்கள் சாத்திய சேலைகளை எழை பெண்களுக்கு புடவைகள் வழங்கினார்.

ஆனால்,பாதியிலேயே புறப்பட்ட அமைச்சர் ஞாபகமாக இரண்டு பட்டுப் புடவைகளை எடுத்து தன் மனைவிக்கு வழங்கிவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டார். அமைச்சர் மனைவிக்கு அங்கிருந்த புடவைகளின் 'டிசைன்' பிடிக்காததால் அமச்சர் வேறு கோவிலுக்கு போகிறாரோ என்று மக்கள் பேசிக்கொண்டு கலைந்தனர்.