ஆளுக்கு ஒரு வீடு போதுமா..? அதே போல் ஆளுக்கு ஒரு தொழில்தான் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் பேசுமா?

தனி நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் தடை விதிக்கக் கூடாது...? நீதிபதிகள் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி அவ்வப்போது நீதிமன்றம் கருத்து வெளியிடுவது சகஜம்தான்.


இந்த கருத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது ஒரு புறம் என்றாலும் எதற்காக இப்படி கருத்து சொல்லப்படுகிறது என்று பார்க்க வேண்டும். உண்மையில் ஒருவருக்கு ஒரு வீட்டுக்கு மேல் இருக்கவேண்டியது இல்லைதான். 

ஆனால், அந்த ஒரு வீடும் எல்லோருக்கும் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்று நாடெங்கும் வாடகை வீட்டில் வசிப்பவர்கள்தான் அதிகம். அப்படியிருக்கும்போது, இப்படி ஒரு கேள்வி எழுப்புவதில் அர்த்தம் என்ன?

இப்போது ஒன்றுக்கு மேல் வீடு வைத்திருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து வீட்டை பறித்து, எல்லோருக்கும் கொடுத்துவிட முடியும் என்பதுதான் உண்மை. ஆனால், அப்படி செய்வது குறித்து யாரும் பேசக்கூட மாட்டார்கள்.

அதேபோன்று ஆளுக்கு ஒரு வீடு என்றால், ஆளுக்கு ஒரு தொழில் என்றுதானே இருக்க வேண்டும். ஒவ்வொரு முதலாளியும் ஒரு தொழில்தானே நடத்த வேண்டும்? பல்வேறு தொழில் நடத்துபவர்களை என்ன செய்வது? நீதிபதிதான் பதில் சொல்ல வேண்டும்.