கோவையில் 29, ஈரோட்டில் 29, நாமக்கல்லில் 18! கொரோனா மண்டலமான கொங்கு மண்டலம்!

கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் என கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சுமார் 82 பேர் கொரோனா பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 234ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் இதுவரை 29பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 மாத கைக்குழந்தையும் ஒன்று.

இதனை தொடர்ந்து ஈரோட்டில் சுமார் 24 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாமக்கல்லில் 18 பேர் கொரோனாவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம், கரூர் மற்றும் திருப்பூரிலும் கொரோனாவுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கொங்கு மண்டலத்தில் 82 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்த 82 பேருமே டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு கொங்கு மண்டலம் திரும்பியவர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் சுமார் 10 வெளிநாட்டினலும் கொரோனாவுடன் கொங்கு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.