மத கலவரத்தை தூண்டுகிறார்களா வட இந்தியர்கள்..? அதிர்ச்சியில் தமிழக இஸ்லாமியர்கள்.

டெல்லி சம்பவத்திற்குப் பிறகு, எந்த நேரத்தில் வண்ணாரப்பேட்டையில் வன்முறை வெடிக்குமோ என்று இஸ்லாமியர்கள் பயந்துபோய் உள்ளனர்.


இந்த நிலையில் நேற்று பா.ஜ.க. நடத்திய சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டத்திற்கு கூடியது ஏராளமான வட இந்தியர்கள்தான். சம்பந்தமே இல்லாமல் வட இந்தியர்கள் போராட முன்வந்திருப்பது இஸ்லாமியர்களை அதிர வைத்திருக்கிறது.

இதுகுறித்து பேசியவர்கள், ‘‘தமிழகம் முழுவதும் பரவியுள்ள வட இந்தியர்கள் கூலியாக இங்கு வந்து, தமிழர்கள் செய்த தொழில்களை இப்போது அவர்கள் செய்கிறார்கள், வளர்ந்து வருகிறார்கள். தொழில்களை மட்டும் குறிவைக்கவில்லை. மெல்ல அரசியலுக்குள் நுழைகிறார்கள். தமிழக கட்சிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துள்ளார்கள்.  

நேற்று குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக கூட்டத்தில் கலந்துக்கொண்ட மார்வாடிகள் சிலர், டெல்லியில் நடந்தது போல் சென்னையில் நடக்கும் என கொக்கறிக்கிறார்கள். அந்த வார்த்தைகளில் எவ்வளவு வன்மம். பிழைக்க வந்தயிடத்தில் இவர்களுக்கு இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? 

இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் உட்பட பல சமூக மக்கள் சகோதரத்துவத்துடன் வாழும் வந்தாரை வாழ வைக்கும் பெரியார் பூமியை கலவர பூமியாக்க துடிக்கிறார்கள் வட இந்தியர்கள். தமிழக காவல் துறை தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், அமைதி பூங்காவான தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக ஏதுவாக அமைந்துவிடும்.

ஆகவே காவல்துறை மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாதைகள், கோஷம் எழுப்பிய வட மாநிலத்தவர்கள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இஸ்லாமியர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.