தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளின் விவரம் வேண்டும் - அரசு வேண்டுகோள்.

தனியார் மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பல்வேறு முடிவுகளை அரசு எடுத்துள்ளது.


அந்த அடிப்படையில் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், உடனடியாக தங்கள் மருத்துவமனைக்காக ஒரு பொறுப்பு அலுவலரை (நோடல் ஆபீசர்) நியமிக்க வேண்டும். 

அரசு உருவாக்கியுள்ள, இணையதளத்தின் வாயிலாக, மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கைகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வப்போது பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களுக்கு தெளிவு இதன் மூலம் பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அமையும். பொதுமக்கள் அச்சத்தைப் போக்கி, அரசும், தனியாரும் வெளிப்படைத்தன்மையுடன், மருத்துவமனை விவரங்களை இணையதளத்தில் ஏற்ற வேண்டும்.

கூடுதல் படுக்கை வசதி தனியார் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை, தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி தனியார் மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த சென்னைக்கு 400 படுக்கை வசதி போதுமா யுவர் ஆனர்..?