செங்கோட்டையனுக்கு மானமும் இல்லை, மூளையும் இல்லை..! பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் ஆவேசம்.

எடப்பாடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு உருப்படியாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவையில்லாமல் புகுத்தப்பட்ட 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பசங்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து இன்று சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை கிழித்து தொங்கவிடுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர், இந்த பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஆவேசமான பிரபல மனநல மருத்துவர் ருத்ரன். 

அவர் இன்று எழுதியிருக்கும் பதிவில், ‘‘குழந்தைகளுக்கான பொதுத் தேர்வு ரத்தாம். பரிசீலித்து முடிவெடுத்தார்களாம். உடனே நாம் நன்றி சொல்வோமாம். கருணைக்கு இரு கரமும் கூப்புவோமாம்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்க்கும் மனத்தில் குழப்பமும் கலக்கமும் விளைவித்ததற்கு வருத்தமே இல்லாமல் ஒரு வெட்டி அறிக்கை- சமூக நீதியும், கல்வி மேம்பாடும் தமிழ்நாட்டின் அடிப்படை வளர்ச்சி விதிகள் என்று புரியாதவர்கள் கோமாளிகள் மட்டும் அல்ல. மானமில்லாதவர்கள் மூளையும் இல்லாதிருப்பது மிகப் பெரிய அவலம்- நமக்கு என்று கூறியிருக்கிறார்.

திடீரென வழக்கு வாபஸ் பெற்றதை நம்பமுடியவில்லை என்று ஒரு பதிவர் எச்சரிக்கை செய்கிறார். அவர், ‘‘இரும்பை வளைக்க அதை அனலில் போட்டு பழுக்கக் காய்ச்சுவார்கள். தேவையான அளவுக்கு அடித்து வளைத்ததும் தண்ணீருக்குள் போட்டால் சொய் என்ற சத்தத்துடன் அது மீண்டும் இறுகும். இந்த அரசின் அறிவிப்புகளும் அப்படித்தான் இருக்கின்றன. சொந்தக் குடிமக்களின் மீது இத்தனை செறிவான உளவியல் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடும் அரசு இதுவாக மட்டுமே இருக்கும்.

குறிப்பாக கல்வித் துறையின் செயல்பாடுகள் மாணவர்களையும், எங்களைப் போன்ற பெற்றோர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக உள்ளது. இதோ மீண்டும் பொதுத்தேர்வு ரத்து என்று அறிவிப்பு. மார்ச் 1ந்தேதி மீண்டும் உண்டு என்று சொல்லித் தொலைக்க மாட்டார்கள் என்ற உறுதியும் இல்லாததால் முழுமையாக மகிழ முடியவில்லை’’ என்கிறார்.

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னதை இப்போது பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது, கிராமத்து தென்ன மரத்துல வெளியாள் ஒருத்தன் ஏறுனானாம். 'ஏன்டா தென்ன மரத்துல ஏறுற?' என்று தோட்டக்காரன் கேட்டதும், 'புல் புடுங்க ஏறுனேம்யா' என்றானாம் அவன். 'தென்ன மரத்துல ஏதுடா புல்?' என்று கேட்டபோது, 'அதனால தாம்யா கீழே இறங்கிக்கிட்டு இருக்கேன்'னு சொன்னானாம். அப்படியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகளும், பின்வாங்கல்களும் என்கிறார்கள்.

என்னப்பா, செங்கோட்டை மக்கள் மனசு இப்பவாது புரிஞ்சதா..?