சிறந்த நாளிதழ் நமது அம்மா, சிறந்த வார இதழ் துக்ளக், சிறந்த மாத இதழ் யாருக்கு..? தமிழக அரசு புதிய விருதுகள் அறிவிக்கப் போறாங்க.

தமிழ் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேய பாவாணர் விருது, அருள்நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா.ஆதித்தனார் நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் விருது என புதிய 7 விருதுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.


தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழ் அறிஞர்களுக்கும், எழுத்தாளர் களுக்கும் சித்திரை தமிழ் புத்தாண்டை மீட்டெடுத்த ஜெயலலிதா, எண்ணற்ற விருதுகளும், பரிசு பாராட்டு சான்றுகளும், நலத்திட்டங்களும் வழங்கி சிறப்பித்துள்ளார். அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் அறிஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேய பாவாணர் விருது, அருள்நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா.ஆதித்தனார் நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் விருது என புதிய 7 விருதுகளை அறிவித்துள்ளார். அவ்விருதுகளுடன் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளன. 

அதன்படி விழாவும், விருதுகள் வழங்குதலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு (2020) சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நமது அம்மாவுக்கும், துக்ளக் பத்திரிகைக்கும் பரிசு கொடுக்காம இருந்தால் சரிதான்.