எடப்பாடி பழனிசாமி அறிவித்த நீடிக்கப்பட்ட ஊரடங்கில் கிடைக்கப்போகும் தளர்வுகள் இதோ

கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.


ஆம், மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதோ அவரது அறிக்கை.

பல்வேறுதினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்றுநடத்தப்பட்டகாணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள்மற்றும் பொதுசுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ளஊரடங்குஉத்தரவு, ஏற்கனவேநடைமுறையில்உள்ளபல்வேறுகட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 &30.8.2020) எவ்விததளர்வுகளும் இன்றி, தமிழ்நாடுமுழுவதும் முழு ஊரடங்குஅமல்படுத்தப்படும். 

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்றபகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல்அனுமதிஅளிக்கப்படுகிறது: 

* தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில்நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதிநிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்படஅனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டுநடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ளமொத்தஇருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள்அமர்ந்து காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை உணவுஅருந்தஅனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதனவசதி இருப்பினும், அவைஇயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணிமுதல்இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். 

* ஊராட்சி, பேரூராட்சிமற்றும் நகராட்சிபகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறியமசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள்தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ளஅனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொதுமக்கள்தரிசனம் அனுமதிக்கப்படமாட்டாது.  

* காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவைகாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரைஇயங்கஅனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* குற்றவியல்நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ்பொதுஇடங்களில் ஐந்து நபர்களுக்குமேல்கூடக் கூடாதுஎன்றநடைமுறைதொடர்ந்து அமலில் இருக்கும். 

* அனைத்து, தொழில்மற்றும் வணிகநிறுவனங்கள்தங்களதுஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணி புரிய ஊக்குவிப்பதோடு, தொழில்மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.

* இரயில் மற்றும் விமானபோக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ளநிலையே தொடரும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குவரும் போதும், சம்மந்தப்பட்டமாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னைமாநகராட் சிஆணையரிடம் முறைப்படி இ,.பாஸ் பெறவேண்டும்.

• திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல்குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் பெரியஅரங்குகள், கூட்டஅரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல்பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றபொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

• மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து. மேற்கண்டகட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள்அளிக்கப்படும்.