காவிரி ஆணையம் மட்டும் செயலுக்கு வந்துவிட்டால், கர்நாடகக்காரனால் தண்ணீர் திறக்காமல் இருக்கவே முடியாது, ஆணையமே திறந்துவிடும் என்றெல்லாம் மக்கள் நம்பிக்கொண்டு இருந்தனர்.
காவிரி ஆணையமே ஒண்ணுமே கிழிக்கலை, இந்த லட்சணத்தில் ஒற்றை நதி தீர்ப்பாயமாம்..!
அதனால்தான் தமிழகம் காவிரி ஆணையத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் கூடிய இரண்டு கூட்டத்திலும், ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்பதை கோரிக்கையாக மட்டுமே வைத்ததே தவிர, தமிழகத்திற்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை.
தண்ணீர் அதிகமாக வந்தால், தானாக தமிழகத்திற்கு பாயும் என்பது மட்டும்தான் காலத்தைக் கடந்த உண்மை என்பது உறுதியாகியுள்ளது. இந்த லட்சணத்தில், எல்லாவற்றையும் ஒன்றாக மாற்றுவதில் ஆர்வமாக இருக்கும் மத்திய அரசு, இப்போது ஒற்றாஇ நதி நீர் தீர்ப்பாயம் அமைக்கப்போகிறதாம்.
அதாவது நாட்டிலுள்ள எல்லா நதிநீர் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்பதை மத்திய அரசு கொண்டு வரப் போகிறதாம். இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிற மாநிலமாக தமிழகம் தான் இருக்கும். ஏனென்றால், காவிரிநடுவர் மன்றம் உள்ளிட்ட எட்டு தீர்ப்பாயங்கள் செய்து வந்த வேலையை இனி ஒரே தீர்ப்பாயம் கவனிக்கும் என்று சொல்கிறபோது, பெரிய அளவில் காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரச்சினைகளை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது என்பது பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியாக அமைந்துவிடும். அதிலும் காவிரி பிரச்சினையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அது பேரிடியாகவே இருக்கும்.
அதனால் ஒற்றைத் தீர்ப்பாயம் என்பது தமிழகத்திற்கு வைக்கப்படும் கொள்ளி என்பதை தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் புரிந்துகொண்டு, ஒன்றாக நின்று எதிர்க்க வேண்டும். அப்படியில்லாமல் இப்போதும் மத்திய அரசுக்கு ஆளும் கட்சி ஜால்ரா போட்டுக்கொண்டு இருந்தால், காவிரி என்பதையும் தண்ணீர் என்பதையும் தமிழகம் மறக்க வேண்டியதுதான்.