திருமணமாகி 9 ஆண்டுகள்! குழந்தை இல்லை! நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த தமிழ் தம்பதி! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் மனைவி நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்த ஜெயபாலன்,மாலினி ஆகிய தம்பதி ஒடிசாவில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர். ஜெயபாலன் ஒடிசா பகுதியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன பின்பும், குழந்தைகள் இல்லாத காரணத்தினால் இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் பெற்றோர்கள் கூட அவர்களிடம் சரியாக பேசாத காரணத்தினால் மிகுந்த மன சோர்வு  ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து திடீரென ஒருநாள் வீட்டிற்குள் சென்ற அவர்கள் வெளியே வரவில்லை பின் இரண்டு நாட்களுக்குப்பின் துர்நாற்றம் வீச அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது கணவனும் மனைவியும் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

பின் வீட்டில் சோதனை மேற்கொண்ட பொழுது அங்கு இருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் மன உளைச்சலால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்றும் காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தாங்கள் செய்த காரியத்திற்கு மன்னிக்குமாறு அவர்கள் பெற்றோர்களிடம் கடிதத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.