கொடநாடு எஸ்டேட் கொள்ளை! 5 கொடூர கொலை! பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?

கொடநாடு எஸ்டேட் கொலையில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்குப் பின்னே இருப்பது யார் என்பதுதான் பரபரப்பாகியுள்ளது.


ஜெயலலிதா இருந்த வரையிலும் இரும்புக் கோட்டை போன்று பாதுகாப்பாக இருந்தது கொடநாடு எஸ்டேட். ஓய்வு எடுக்க மட்டுமின்றி விசாரணை அலுவலகமாகவும் கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார். அந்த எஸ்டேட்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம்நகை மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக பேசப்பட்டு வந்தன. ஜெயலலிதா மரணத்தையொட்டி சில கொலைகள்கொள்ளை நடந்தன.


   இப்போது அந்த கொலை மற்றும் கொள்ளைக்குப் பின்னே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ்இதுதான்  இன்று டெல்லி தொடங்கி தமிழகம் வரை ஹாட் டாப்பிக். கொடநாட்டில் சில காலம் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் டிரைவராகப் பணியாற்றியவர் கனகராஜ். இவர் ஒருவகையில் எடப்பாடிக்கு சொந்தம் என்று சொல்லப்படுகிறதுஇதுதான் குற்றம் சாட்டப்படுவதற்கு முக்கிய காரணம்.


   கடந்த ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றிய ஓம்பகதூர் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்படமற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரால் படுகாயம் அடைந்து கிடந்தார். அப்போது கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்ததாக சொல்லப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் கடந்த ஏப்ரல் 28ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் இருசக்கர வாகனத்தில் கார் மோதியதில் உயிர் இழந்தார். குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ்க்கு நெருங்கிய நண்பரான சயானைப் பிடிக்க போலீஸ் விரைந்தபோதுசயானின் காரும் விபத்துக்கு உள்ளானது. அப்போது சயானின் மனைவி வினுப்பிரியா மற்றும் வயதுக் குழந்தை நீத்து ஆகியோ சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர்.


  போலீஸ் விசாரணை அமுங்கிக் கிடந்த நிலையில்இன்று  டெல்லியில் மேத்யூஸ் ஆவணப்படத்தை வெளியிட்டார்அப்போது  சயான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே கொள்ளை அடிப்பதற்கு கனகராஜ் திட்டமிட்டதாகச் சொல்கிறார் சயான். தமிழர்கள் யாருமில்லாமல் கேரள ஆட்களை மட்டும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னதாகவும்அப்போது அனைத்து சிசிடிவிகளும் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.


  ஏதேனும் சிக்கல் வராதா என்று சயான் கேட்டபோதுஇந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்டிருப்பதால் ஒரு பிரச்னையும் எழாது என்று உத்தரவாதம் கொடுத்தாராம். அதனாலே இரண்டு காவலாளிகளையும் கட்டிப்போட்டு கொள்ளை அடித்தோம் என்று சொல்லியிருக்கிறார். காவலாளியை கொல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றபோதும் கட்டிப்போட்டு மூடியதில் உயிர் பிரிந்துவிட்டது என்கிறார். அதன்பிறகு சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். எனக்குத் தருவதாக சொன்ன கோடி ரூபாயை கனகராஜ் கொடுக்கவில்லை. அதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார். 


  இதுகுறித்து பின்னர் பேசிய மேத்யூஸ்அங்கு இருந்த வீடியோ ஆவணங்களை எடுப்பதுதான் முக்கிய நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த வீடியோக்களை வைத்துதான் ஜெயலலிதாவை சசிகலா கட்டுப்படுத்தி வந்தார்அதனை தான் எடுத்துவிட்டால் எல்லோரும் நம் கட்டுப்பாடுக்குள் வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில்அனைவரும் அப்பல்லோவில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி திட்டம் போட்டு செயல்படுத்தி இருக்கிறார் என்று சொல்கிறார் மேத்யூஸ்.


   இத்தனை நாட்கள் கழித்து திடீரென நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது தெஹல்கா மேத்யூஸ் குற்றம் சாட்டுவதற்குப் பின்னே யார் இருக்கிறார்கள் என்பதுதான் பலமான கேள்வியாக எழுந்துள்ளது. ஏனென்றால்இப்போது எடப்பாடி பழனிச்சாமி பலமான முதல்வராக இருக்கிறார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதற்கொண்டு அனைவருமே அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.. வலுவாக இருப்பது விரும்பாத ஒருவர்தான் இந்தக் குற்றசாட்டுக்குப் பின்னே இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.


  தி.மு.. மீதுதான் முதல் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இன்று டெல்லியில் தெஹல்கா பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தது முதல்மீண்டும் மீண்டும் செய்தியை அதிகம் ஒளிபரப்பு செய்வதில் தி.மு..வும் அதன் தொலைக்காட்சிகளும்தான் முன்னணியில் இருக்கின்றன. அதனால் எடப்பாடியை பலவீனப்படுத்துவதற்காக இப்படியொரு குற்றச்சாட்டை மேத்யூஸ் மூலம்  சொல்வதாக பேசப்படுகிறது.

எப்படியாயினும்தன் மீதான குற்றச்சாட்டை எடப்பாடி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் எதிர்காலம் இருக்கிறது.