இன்று 69வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தெலுங்கானா ஆளுவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதல்வர், துணை முதல்வர், தெலுங்கானா ஆளுநர், விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை , ’வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் விஜயகாந்த் பெற்றுள்ளார் என வாழ்த்து கூறினார். அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் அனுப்பியிருக்கும் வாழ்த்து செய்தியில், ‘என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படத் துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும்,, நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.