குடியுரிமை சட்ட திருத்தம்..! நாளை திமுக நடத்தும் போராட்டம்! விஜய் பங்கேற்கிறாரா? சற்று முன் வெளியான தகவல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் பல போராட்டம் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக சார்பில் நாளை நடைபெறும் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுக்க பல வன்முறைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தின் ஆளும் கட்சி இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரிக்கும் நிலையில், எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார். மேலும், திமுக சார்பில் நாளை நடைபெறும் பேரணியில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விநியோகஸ்தர் சங்க தேர்தலில் வாக்களித்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , திமுக சார்பில் நாளை நடைபெறும் பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்தும், அதில் நடிகர் விஜய் பங்கேற்பாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த , எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகன் ஊரிலேயே இல்லை எனவும், படப்பிடிப்பில் வெளியூர்களில் இருப்பதாகவும் தெரிவித்தார்.