சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு இடமாற்றம்! பரபரப்பு பின்னணி!

தஹில் ரமானி 2018 ஆகஸ்ட் 8ம் தேதிமுதல் மெட்ராஸ் ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்.


மத்திய தீர்ப்பாய வழக்குகளிலும் கிரிமினல் வழக்குகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டவர்.இந்தியாவி தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவர்.இவரை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக மாற்ற சிபாரிசு செய்திருக்கிறது உச்சநீதிமன்ற கொலீஜியம்.

இது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறது. மெட்ராஸ் ஹைக்கோர்ட்டில் 73 நீதிபதிகள் கொண்ட நாட்டின் நான்காவது பெரிய நீதிமன்றம்.257,234 வழ்க்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மாறாக , மேகாலயா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் 

சேர்த்தே மூன்று நீதிபதிகள்தான்.வெறும் 1034 வழக்குகள் மட்டுமே இங்கு பதியப்பட்டு இருக்கின்றன.தஹில் ரமானி இப்படி முக்கியத்துவம் இல்லாத சிறிய நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் குஜராத் கலவரம் இருப்பதாக கிசுகிசுக்கப் படுகிறது. பல்கிஸ் பானோ என்கிற இஸ்லாமியப் பெண் கலவரக்காரர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கை ,

உச்சநீதிமன்றம் குஜராத்தில் இருந்து மும்பை நீதிமன்றதுக்கு மாற்றியது.அப்போது அந்த வழக்கை விசாரித்தவர் தஹில் ரமானி.அதில் போலிசார் மற்றும் டாக்டர்கள் அடங்கிய 11 பேரை விடுவிக்க பெரிய முஸ்தீபுகள் நடந்தன.ஆனால் தஹில் ரமானி அசைந்து கொடுக்கவில்லை.அவர் எழுதிய 400 பக்கத் தீர்ப்பு அவர்களது தண்டனையை உறுதி செய்த்தது.

இப்போது அவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு சிறிய நீதிமன்றதிற்கு மாற்றப்பட காரணம் என்று சொல்லப் படுகிறது. இப்போதைக்கு இந்த கேள்விக்கு விடை தெரிய வாய்பில்லை.தஹில் ரமானி ஓய்வு பெற்ற பிறகு சுயசரிதை எழுதும்போது ஒரு வேளை தெரிய வரலாம்.