தமிழக பாஜக தலைவர்கள் செம பசையாத் தான் இருக்காங்க! அதிரவைக்கும் பட்டியல்!

தமிழகத்தில் பா.ஜ.க. கடுமையான தோல்வி அடைந்துவிட்டது.


இந்த நிலையில், கட்சியை நம்பியிருந்த பல்வேறு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கடுமையான டென்ஷனில் இருப்பார்கள், பணத் தட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால், அரசியலில் ஜீரோ மார்க்குதான் உங்களுக்கு. தமிழகத்தின் டாப் 10 பா.ஜ.க. தலைவர்கள் என்னென்ன பதவியில் இருக்கிறார்கள், எப்படியெல்லாம் ஆட்சியை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.


1. தமிழிசை சௌந்தரராஜன்,  இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்திய அரசு நிறுவனம்.
2. ஹெச்.ராஜா, இந்திய ரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக் குழு தலைவர்.
3. சி.பி.ராதாகிருஷ்ணன்,  இந்திய கயிறு வாரிய தலைவர் (தலைமை அலுவலகம் கேரளாவில்).
4. வானதி சீனிவாசன், இயக்குநர், சென்னை உரத் தொழிற்சாலை, இந்திய அரசு நிறுவனம்.
5. லலிதா குமாரமங்கலம், தலைவர், தேசிய மகளிர் ஆணையம்.


6. குருமூர்த்தி, இயக்குநர், ரிசர்வ் வங்கி.
7. முனைவர் பேகம், மத்திய முஸ்லிம் மகளிர் நல வாரியம்.
8. எல்.முருகன், துணைத் தலைவர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.
9. கருப்பு முருகானந்தம், அறங்காவலர்கள், சென்னை துறைமுகம், இந்திய அரசு நிறுவனம்.
10. எஸ்.வி.சேகர், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர்.