14 மாவட்டங்களை மிரட்டப் போகுது பருவ மழை! எங்கெங்கு தெரியுமா?

வெப்பச்சலனம்,தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு .


இதில் சென்னை,

திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர்

திருவண்ணாமலை,

விழுப்புரம்,புதுச்சேரி, தேனி,திண்டுக்கல்,நீலகிரி,கடலூர், நாகை,திருவாரூர், காரைக்கால் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7செ.மி மழையும்,வேலூர் மாவட்டம் களவையில் 5செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

தென் மேற்கு பருவமழை தற்போது வழுவடைந்து வருவதாலும்,வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும்

வட தமிழக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்,அதிகபட்சமாக 37டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.