உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை வருமா..? நாளைக்குத் தெரிந்துவிடும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.
ஆனால், இந்தத் தேர்தல் குறித்து எந்த ஒரு கட்சியும் பெரிதாக ரிஸ்க் எடுக்கவே இல்லை. ஏனென்றால், அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் நடக்காமல் நிறுத்தப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றன.
மேலும் லோக்கல் கோர்ட் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலும் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவில் கூறியுள்ளது.
மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ள் நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த புதிய மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.
ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், தேர்தல் தள்ளிவைக்கப்படவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எப்படியும் நாளை விடை தெரிந்துவிடும்.