பூட்டிய அறைக்குள் சடலமாக தொங்கிய இளம் மாணவி! நேரில் சக தோழிகள் கண்ட காட்சி! திருவாரூர் மத்திய பல்கலை., விபரீதம்!

சென்னையில் ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த மைதிலி என்ற மாணவி திருவாரூர் மத்திய பல்கலைக்கழககத்தில் பி எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தகவல் அறிந்து சென்ற நன்னிலம் காவல் நிலைய போலீசார் மைதியிலின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சக மாணவிகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று இரவு மைதிலி உணவு சாப்பிட வரவில்லை எனவும், ஒருமாதிரியா சோகமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். ஒரு மணிநேரம் கழித்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டதாகவும் நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த ஜன்னல் வழியே பார்த்தபோது மைதிலி தூக்கில் தொங்கியபடி இருந்ததாகவும் சகமாணவிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். இதையடுத்து மைதிலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை ஐஐடியில் நடைபெற்றது போலவே மாணவி உயிரிழப்புக்கு பேராசிரியர்கள் யாரேனும் காரணமா? அல்லது காதல் விவகாரம் ஏதேனம் உள்ளதா? சீனியர் மாணவர்கள் யாரேனும் தொல்லை கொடுத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.