13 நாட்கள்! லண்டன், கிளாஸ்கோ, நியுயார்க்! உலகம் சுற்றும் வாலிபனாகும் எடப்பாடியார்!

சென்னையில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.


ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 13 நாட்கள் வெளிநாடு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி அங்குள்ள வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள உள்ளார்.

லண்டனில் ஆகஸ்ட் 29ம் தேதி சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுடன் சந்தித்து பேசிவிட்டு 30ம் கிளாஸ்கோவில் எரிசக்தி துறை முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.

செப்டம்பர் 1ம் தேதி அமெரிக்காவின் பெரிய நகரமான பப்பலோவுக்கு சென்று கால்நடை தொழில் அபிவிருத்தி தொடர்பாக கருத்துக்களை கேட்டறிகிறார் முதலமைச்சர்.

பின்னர் அன்றிரவு 7.30 மணிக்கு யாதும் ஊரே என்ற தலைப்பில் நடைபெறும் புலம்பெயர்ந்த தமிழக முதலீட்டாளர் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

செப்டம்பர் 4ம் தேதி சான்பிரான்ஸிஸ்கோ முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்கும் முதலமைச்சர் 5ம் தேதி தெல்சாவில் உள்ள தொழிற்சாலையையும், பிரபலமான பண்ணையையும் பார்வையிடுகிறார்.

பின்னர் செப்டம்பர் 7ம் தேதி புறப்பட்டு துபாய் வழியாக 8ம் தேதி சென்னை வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றனர்