உள்ளாட்சியை தள்ளிவைக்க துள்ளி வருகிறார் செ.கு.தமிழரசன்! எடப்பாடியார் கையாள்தானா?

இன்றைய நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் ரிசல்ட் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.


அதுதவிர, கூட்டணிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எடப்பாடியார் மண்டையை உடைத்தே விடுவார்கள். அதனால் இதனை எப்படி தள்ளிவைக்கலாம் என்று ஆளும் கட்சி ஆராய்ந்துவந்தது. அதற்கு விடை கண்டுபிடித்தே விட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறியிருக்கிறார் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்.

இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். உள்ளாட்சி தேர்தலில் மாநகர துணை மேயர் முதல் ஒன்றிய ஊராட்சி துணை தலைவர் வரை அனைத்து மட்டத்திலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

துணை தலைவர் பதவிகளிலும் மாநகராட்சி முதல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல்களில் ஒடுக்கப்பட்டமக்ககளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். துணைத் தலைவர் பதவிகளூக்கான தேர்தல்களில் இடஒதுக்கீடு முறை பின்படுத்தப்படாதது சமூக நீதிக்கு எதிரானது.

இது குறித்த சட்ட மேற்கொள்களையும் அரசு உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை செயலர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி உள்ளோம். 2490 இடங்கள் தலித் மக்களுக்கான வாய்ப்பு மற்றும் உரிமை இதுவரை கிடைக்கவில்லை. வரக்கூடிய தேர்தலில் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும்.

கோரிக்கையை ஏற்காவிடில் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆக, கோர்ட்டுக்குப் போய் தடை வாங்குவதற்கு தமிழரசன் ரெடி!