தமிழர்கள் நன்றி மறந்தவர்களா? பொன்னாருக்கு எதிராக பொங்கும் தமிழர்கள்!

தங்களுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால் அவர்களை நன்றி மறந்தவர்கள் என்று சொல்வதா என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பல தமிழ் அமைப்புகள் பொங்கியிருக்கிறார்கள்.


அதாவது தமிழ் மொழியை புகந்த மோடியை தமிழர்கள் கொண்டாடவில்லையாம். தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த மிகப்பழைய உண்மை. அந்த உண்மையை சொன்னதற்காக எதற்காக பாராட்ட வேண்டும் என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.

நான் ஒரு இந்தியன் என்று யாராவது சொன்னால், அவரை பாராட்டுவார்களா அல்லது நான் ஒரு ஆண் அல்லது பெண் என்று சொன்னால் பாராட்டுவார்களா? அனைவருக்கும் தெரிந்த உண்மையைச் சொன்னதற்காக பாராட்டவில்லை என்றால் நன்றி மறந்தவர்கள் என்பது என்ன டிசைனோ..? 

தமிழர்களை அவமானப்படுத்திய பொன்னார் இந்தப் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசியலில் எதற்காக தமிழை கலக்க வேண்டும் பொன்னார்..?