வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப முயன்ற தமிழர்! ஊருக்கே வர முடியாத அளவிற்கு ஏற்பட்ட கதி!

குடும்பத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சமேனும் அதிகம் சம்பதித்து பிரச்சனைகளை தீர்க்கத்தான் பல இளைஞர்கள் சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டிற்கு சென்று வேலை செய்கின்றனர்.


ஆனால் அதே சமயம் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த நாட்டில் உயிர் இழக்கும் சொந்தங்களின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டுவர ஒவ்வொரு பெற்றோரும் படாதபாடு பட்டுதான் வாங்கவேண்டியிருக்கிறது. அதே நிலைநிலைதான் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் பூமாலை கட்டும் பணியை செய்து வந்த தங்கபாண்டியன் என்பவர் விசா காலம் முடிந்தும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 14ம் தேதி தனது தாய்நாட்டில் வசிக்கும் சொந்த பந்தங்களை பார்க்க மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அங்கிருந்தவர்கள் சிலர் தங்கபாண்டியனின் பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்

இதனால் மனவேதனை அடைந்த பெற்றோர் குடும்ப பாரத்தை சுமக்க சென்று உயிரிழந்த மகன் தங்கபாண்டியனின் உடலை இந்தியா கொண்டுவர மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 20 நாட்கள் ஆகியும் தங்கள் மனு மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனால் மகனுக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் ஏற்கனவே வறுமையில் வாடும் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் துணைநின்று மகன் தங்கபாண்டியன் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.