தமிழக மக்களுக்கு மெத்த பொருந்துகிற வாக்கியம் "மறதி தமிழர்களின் பரம்பரை வியாதி" என்பது.
மங்கிப்போன மழைநீர் சேகரிப்புத் திட்டமும்.! தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்களும்.! ஒரு திகு திகு ரிப்போர்ட்!
"தண்ணீர்"
21 ஆம் நூற்றாண்டின்
நீலத் தங்கம் (Blue Gold) என்றும்,
தண்ணீர் தங்கத்திற்கு நிகரானது
எனவும், அது ஒரு திரவத்
தங்கம் (Water is liquid gold) என
கூறுகிறார் வரலாற்று ஆய்வாளரான சர்.ஆர்தர் காட்டன்
இந்திய தீபகற்பம் மூன்று மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட "ஆழி சூல் உலகு" என ஆரம்பகால புத்தகங்களில் படித்து வளர்ந்த நாம்.! பிற்காலங்களில் "நீரின்றி அமையாது உலகு" என்கிற வாசகங்களை வாகனங்களில் படித்துவிட்டு, அந்த நீருக்காகவே இன்று அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றோம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தினை காண்கிறோமோ இல்லையோ.! ஆண்டுக்கு ஒருமுறை நிச்சயமாக சாலைகளில் தண்ணீர் குடங்களை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகவும், ஊர் ஊராகவும் மக்கள் அலைவதையும். அவர்கள் படும் அல்லல்களை ரசித்துக் கொண்டு அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.! எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரின் அவசியத்தை எடுத்துச் சொல்லாமல்.
பல காலங்களில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்தாலும், 2015 ஆண்டு கணக்கின்படி இந்த இரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக 958 மி.மீட்டர் கிடைப்பதாக தெரிவிக்கிறது மாநில வானிலை ஆராய்ச்சி மையம். அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீட்டரும், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீட்டரும் கிடைக்கிறதாக தெரிவிக்கிறது.
குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீட்டர் நீரும் கிடைக்கிறது, தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களிலே அதிகம் பெய்கிறதால், இதில் கிடைக்கக்கூடிய அதிகப்படியான அளவு நீர் கடலில் கலந்துவிடுகிறதாகவும்.கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் தமிழகம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்.
அனைத்து
தேவைகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரினை உறிஞ்சிடும் மெட்ரோ
நகரங்களில், மக்கள் தொகை
பெருக்கம், மற்றும்
தண்ணீரின் தேவை காரணமாக தமிழகத்தில் நிலத்தடிநீர் மட்டம் வேகமாக குறைந்து
வருகிறதாகவும்.எதிர்கால திட்டங்களை இப்போதே வகுத்துக்கொள்ளுங்கள் என்று 2016 ஆண்டே தமிழக நீர்வத்துறையை
எச்சரித்திருந்தது தேசிய நீர் மேலாண்மை வாரியம்.
அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல். தான்தோன்றி தனமாக அரசியல் செய்த ஆளுங்கட்சியின் அவலங்களை தான் இன்று இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது. உலகில் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீருக்காகப் போர் நிகழும் என்று அவ்வப்போது விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறி வருகின்ற இந்த வேலையில், இப்போதே நீருக்காக ஒரு பெரும் புரட்சிப் பயணம் தொடங்கியிருக்கிறது தமிழகத்தில்.
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆற்றையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கிறது. நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதில் 60 சதவீத அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கனவே உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி விட்டோம். தற்போதைய கையிருப்பு 40 சதவீதம் (8875 மி.க.மீ) மட்டும் தான். இப்படி அதல பாதாளத்தில் உள்ள நிலத்தடி நீரை உயர்த்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது மழை நீர் சேகரிப்பு திட்டம். வீடு, வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, மழை நீர் சேமிப்பு கட்டமைப்புக்கும், வரைபடம் கட்டாயமாக்கப்பட்டது அப்போது.
ஆனால் இன்று இந்த திட்டம் வெறும் சம்பிரதாய சடங்குகளாகவே உள்ளது தமிழகத்தில். குடியிருப்புகளை காட்டிலும் அரசு அலுவலகங்களிலே முன்பு அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பானது அரசு இயந்திரங்களின் சுணக்கத்தால் காணாமல் போயுள்ளது என ஊர்ஜிதமாகவே கூறலாம்.