கீழடி 5ம் கட்ட ஆய்வில் அபூர்வ பொருட்கள்..! பட்டொளி வீசும் தமிழன் பெருமை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் உலகின் தொன்மையான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வந்ததையடுத்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.


இந்நிலையில் கீழடி அகழ்வாராய்ச்சி குழுவினர் 5ஆம் கட்ட ஆய்வில் தற்போது சுடுமண் காதணிகள், சங்கு, வளையல்கள், சுடுமண் சிற்பங்கள், மற்றும் சிறிய அளவிலான தண்ணீர் நிரப்பி வைக்க கூடிய தொட்டி என பல்வேறு தொன்மையான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

உலகில் முதன்மை நாகரீகம் என போற்றப்படும் தமிழனின் நாகரீகமே! இந்நிலையில் அதனை ஆராயும் பொருட்டு ஒரு குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அதனை நிறுத்தக்கோரி பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தால் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் முதல் 4 கட்ட ஆய்வு முடிந்த பிறகு தற்போது 5 ஆம் கட்ட ஆய்வு நடந்து வருகிறது. இதில் மிகவும் தொன்மையான தமிழர்கள் பயன்படுத்திய சுடுமண் காதணிகள், மற்றும் சுடுமண் சிற்பங்கள் ,ஆகியவை கிடைத்துள்ளது. இந்நிலையில் 4 ஆம் கட்ட ஆய்வில் சுடுமண் அச்சுக்கள், சுடுமண் சிற்பங்கள்ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து 5ஆம் கட்ட ஆய்வு நடைபெறுகிறது. அந்த காலத்தில் பெண்கள் பயன்படுத்திய காதணிகள், வளையல்கள் மற்றும் அழகு சார்ந்த பொருள்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் ஒரு தொட்டியும் கிடைத்துள்ளது. அதில் 4 அடி உயரமும் 5 அடி நீளமும் கொண்டதாகும் இதை தண்ணீர் திறப்பதற்காக பயன்படுத்துவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதில் சிறுசிறு இரும்பு தாதுக்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் அதே இரும்புத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பொருட்களையும் அலுவலகத்திற்கு எடுத்துவந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆய்வு முடிந்து வந்த பிறகு அவைகளைப்பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொருள்கள் எக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்து ஆய்வு முடிவு வந்த பிறகே வெளியிடப்படும் என கீழடி அகழ்வாராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.