தமிழ் திரையுலகில் விரசம் இல்லாமல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி இளைஞர்களை கவர்ந்த வெண்ணிற ஆடை மூர்த்தியை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்துவிட முடியாது.
நம்ம காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியா இப்படி? ரசிகர்களை அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே!

சின்னத்திரை, பெரிய திரை என காமெடி முத்திரை பதித்தவர். இவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம். சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் இவர் அறிமுகம் ஆனார்.
இதனால் வெண்ணிற ஆடை மூர்த்தி என்கிற பெயர் இவருக்கு கிடைத்தது. இரட்டை அர்த்தங்களில் இவர் பேசும் வசனத்தால் திரையரங்குகள் அதிரும். சன்டிவியில் இவரது மீண்டும் மீண்டும் சிரிப்பு புரோகிராம் 90ஸ் கிட்சின் பேவரிட்.
தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் மூர்த்தி நடிப்பதில்லை. அண்மையில் இவரது 83வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.