என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்! திருமண மோசடியில் சிக்கிய இளம் நடிகை கதறல்!

தமிழ் திரைப்பட நடிகை சுருதி திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒரு நபரை ஏமாற்றி சுமார் 41 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சுருதி குறித்து அவதூறான தகவல்கள் இணையதளத்தில் பரவி வருவதால் அவற்றை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரை விசாரித்த நீதிபதி 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோவை காவல்துறை ஆணையருக்கு பரிசீலனை செய்துள்ளார்.

தமிழில் வெளியான 'ஆடி போன ஆவணி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுருதி இவர் திருமண வரன் தேடும் இணையதளத்தின் மூலம் ஜெர்மனியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்க்கும் ஒரு நபருக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் சில நாட்கள் நன்றாக பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரிடமிருந்து பல்வேறு காரணத்திற்காக சுமார் 41 லட்சம் வரை பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுருதி கோவை போலீசாரால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது புகைப்படங்களுடன் கூடிய அவதூறு பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அவற்றை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை சுருதி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதை விசாரித்த நீதிபதி கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு வரும் 6 வாரங்களுக்குள் அவரது கோரிக்கைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.