66 வயதில் 4வது கல்யாணம்! பாடிகார்ட் அழகியை மணந்த மன்னர்! அதிர வைக்கும் காரணம்!

தாய்லாந்து மன்னர் தனது 66வது வயதில் 40 வயதான பாடிகார்ட் அழகியை 4வதாக திருமணம் செய்து கொண்டார்.


 தாய்லாந்து அரசர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு காலமானார். இதன் பிறகு அவரது மகன் மகா வஜிரலோங்கார்ன் அரசராக அறிவிக்கப்பட்டார்.

இவரது முடிசூட்டு விழா பாங்காக்கில் சனிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராக வகையில் புதிய மன்னர் தனது பாடிகார்ட் குழுவில் அதிகாரியாக இருக்கும் சுதிதா தித்ஜெய் என்பவரை  திடீர் திருமணம் செய்து கொண்டார். 

தாய் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக இருந்த சுதிதா தித்ஜெய்யை விமானத்தில் வைத்து புதிய மன்னர் பார்த்துள்ளார். இதன் பிறகு இவர்களுக்கு காதல் மலர்ந்தது- தொடர்ந்து  கடந்த 2014ம் ஆண்டு வஜிராலோங்கர்ன் தனது பாதுகாப்பு குழுவின் துணை அதிகாரியாக சுதிதாவை நியமித்தார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அவரையே திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மூன்று திருமணம் செய்து விவகாரத்து பெற்ற மன்னருக்கு இது 4வது திருமணம் ஆகும்.

மன்னரான பிறகு தனக்கு ராணி வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இது அந்நாட்டு மக்களை அதிர வைத்துள்ளது.