சுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு! ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார் மோடி?

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் அத்தனை பணத்தையும் கொண்டுவருவோம்,


எல்லோருடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவோம் என்று ஆசை காட்டி ஆட்சிக்கு வந்தவர் மோடி. அதன்பிறகு சுவிஸ் வங்கியில் தகவல் கேட்டிருக்கிறோம் என்று சொல்லியே ஐந்து ஆண்டு காலத்தைக் கடத்தினார்கள்.

இந்த நிலையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலை சுவிஸ் வங்கி, இந்தியாவுக்கு அனுப்பிவிட்டதாக தகவல் வெளியே வந்துள்ளது. ஏனென்றால் சமீபத்தில் மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தப்படி சுவிஸ்நாட்டு வங்கியில் ஒரு இந்தியர் கணக்கு வைத்திருந்தால் அவரது கணக்கு விபரங்கள் சுவிஸ்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்;

அது முழுமையாக இந்திய வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன்படி வரி ஏய்ப்பவர்கள் மீது இந்திய வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

அதன்படி தற்போது 2018ம் ஆண்டு வரையிலான கருப்பு பண முதலைகளின் பட்டியல் அனுப்பப்பட்டதாக சுவிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை அந்தப் பட்டியலில் யாருடைய பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்று மோடி தெரிவிக்கவில்லை, அதைப் பற்றி வாயைக்கூட திறக்கவில்லை.

பட்டியல் வந்ததும், அவங்க பணத்தைப் புடுங்கி எங்களுக்குப் போட வேண்டியதுதானே மோடி சார், ஏன் லேட் பண்றீங்க?