சூர்யா Vs ஹெச்.ராஜா! மோதலுக்கு காரணம் என்ன? பரபரப்பு பின்னணி!

திடீரென சூர்யாவுடன் ஹெச்.ராஜா மோதுவதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


அண்மையில் சென்னையில் அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பேசினார். அப்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் அரசுப் பள்ளிகள் மூடப்படக்கூடும் என்று சூர்யா தெரிவித்தார். மேலும் உயர்நிலைக்கல்விக்கான கல்லூரிகளில் கிராமப்பகுதி மாணவர்களுக்கு கிடைக்காத சூழலை புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும் என்று சூர்யா கூறினார்.

எனவே புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்பது போல் சூர்யா பேசினார். அதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்றும்,ஆசிரியர்களே இல்லாமல் எப்படி மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவார்கள் என்றும் சூர்யா கேட்டிருந்தார்.

ஒட்டு மொத்தமாக மத்திய அரசை குறை சொல்லும் வகையிலும் மத்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையிலும் சூர்யா பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ட்விட்டரில் சூர்யாவுக்கு எதிராக பாஜகவினர் மற்றும்அக்கட்சி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இதிலும் ஒரு படி மேலே சென்ற ஹெச்.ராஜா, நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதிலும் சூர்யா வன்முறையை தூண்டுவதாக ஹெச்.ராஜா தடாலடியாக கூறி வருகிறார். இதனிடையே திடீரென சூர்யா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீட் தேர்வுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளனர்.

அதிலும் சூர்யா மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசிய பேச்சுகள் வைரல் ஆகியுள்ளன. இதன் பின்னணி குறித்து விசாரித்த போது வழக்கம் போல் சூர்யாவின் புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த சமயத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும்,மோடிக்கு எதிராகவும்பேசினால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று அவர் இப்படி பேசியிருக்கலாம் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இது குறித்து திரையுலகில் விசாரித்த போது என்ஜிகே படம் படு தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் காப்பான் படத்திற்கு முன்னதாக தன்னுடைய இமேஜை மேக் ஓவர் செய்ய சூர்யா இப்படி பேசியிருக்கலாம் என்கிறார்கள். என்ஜிகே படத்தில் அரசியல்வாதியாக நடித்த சூர்யா உண்மையில் அரசியல்வாதி ஆக ஆசைப்படுகிறார் போல.