தம்பி சுர்ஜித் வருவான் என 4 இரவுகள் காத்திருந்த அண்ணன்..! மரணச் செய்தியை கேட்ட பிறகு அரங்கேறிய சம்பவம்!

கடந்த வெள்ளி கிழமை மாலை 5.30 அளவில் ஆழ்துளை கிணற்றி விழுந்த சுர்ஜித் கடைசி இறந்த உடல் மட்டும் மீட்ட நிலையில், இதனை கண்ட அவன் அண்ணன் அதிர்ச்சியில் அதிர்ந்து போனான். அந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.


சுர்ஜித் பெற்றோரான, பிரிட்டோ ஆரோக்கியதாஸ் , கலாமேரி தம்பதிக்கு 2 மகன்கள். இவர்களின் இளையவன் தான் குழந்தை சுர்ஜித். இந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை மாலை 5.30 அளவில் ஆழ்துளை கிணற்றி விழுந்த சுர்ஜித், எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி செய்தி மட்டும் தான் கிடைத்தது.  

அந்த செய்தியை அறிந்த அனைவரும் அதிர்ந்து கலங்கி நின்றனர். காலையில் துயரச் செய்தியுடன் அத்தனை பேரையும் அழவும் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் சுர்ஜித்தின் உடல் மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வு செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், குழந்தை சுர்ஜித்தின் மரணச் செய்தியை அறிந்த அவன் அண்ணனை அதிர்ச்சியில் உறைந்து போனான். தம்பி திரும்பி வருவான் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அனைவருக்கும் சுர்ஜித் இறந்துவிட்டான் என்ற செய்தி மட்டும் தான் கிடைத்தது. ஆனால் கடைசி வரை தம்பி மீளவேயில்லை என்பது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

சுர்ஜித் இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சிகளை சந்திக்கக் கூடிய வயதில் இல்லை என்றாலும். அதனை ஏற்று தனது உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல். தம்பியைக் காண முடியாத ஏக்கத்துடன். அந்த சிறுவனின் முகத்தில் சோகம் மட்டும் தான் கூடிகொண்டு இருந்தது.

 தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கூட அறியாமல் கவலைகள் சூழ்ந்த விழிகளுடன் தனது உறவினர் பிடியில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான் சுர்ஜிதின் அண்ணன்.