IPL: இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா செய்த அசத்தல் சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா ipl போட்டிகளில் 5000 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அணைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்களுக்கு  ஆல் அவுட் ஆனது.

பின்னர் சென்னை அணி பேட்டிங் செய்த போது அந்த அணியின் சுரேஷ் ரெய்னா 15 ரன்களை கடந்த போது ipl  போட்டிகளில் 5000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் அடைந்தார். இவர் தனது 177 வது போட்டியில் இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடக்கது.

ipl  போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ளார்.