உயிர் போனால்தான் அரசு வேலை செய்யுமா? உயர் நீதிமன்றம் நச் கேள்வி!

பேனர் விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியது. அதேபோன்று சுர்ஜித் இழப்புக்கும் நாக்கைப் புடுங்கும் வகையில் ஒரு கேள்வி கேட்டுள்ளது.


இதனால் எல்லாம் அரசு மாறிவிடுமா என்ன..? ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் இன்று வழக்கு தொடர்ந்தார். மேலும் பலியான சுஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- என்றும் வேண்டுகோள் வைத்தார்.

 நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு இந்த மனுவை விசாரித்து தமிழக அரசுக்கு செம சூடாக கேள்வி எழுப்பியிருக்கிறது. "ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்களை அரசு பராமரிக்கிறதா?

மாநிலம் முழுவதும் எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? தோண்டப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை? மாநில அரசு வகுத்த விதிமுறைகளை மீறிய எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள், சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் தொடர்பான சட்டத்தையும், சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்தப்படுகிறது.

பிறகு அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் யாரும் எந்த ஆய்வும் செய்வதில்லை என்றும் நீதிபதிகள் வருத்தப்பட்டனர். 

இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் பதிலை நவம்பர் 21ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தவிட்டு, வழக்கை நீதிபதிகள் உத்தரவிட்டன. எந்த ஊடகங்களும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடக்கவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.